மத்திய பட்ஜெட் 2021
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு 35000 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது.
பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயம்
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு.
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன
பெட்ரோல் மற்றும் டீசல்
வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு முறையே ரூ .2.5 மற்றும் லிட்டருக்கு ரூ .4 வரி விதிக்கப்பட்டுள்ளது
வருமான வரி
75 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு
2014-ல் 3.31 கோடியாக இருந்த வருமானவரி ரிட்டர்ன் செலுத்துவோர் எண்ணிக்கை 2020ல் 6.48 கோடியாக அதிகரிப்பு.
தொழில்
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றத்துக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கீடு.
அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
போக்குவரத்து
மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது
பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம்.
63,246 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.
ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி ஒதுக்கீடு.
வர்த்தகரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால், அதற்கு தகுதிச்சான்று பெற வேண்டும் , தனிநபர் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால் அதற்கு தகுதிச்சான்று பெற வேண்டும்.
கல்வி
100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.
இறக்குமதி
வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இறக்குமதி தங்கம் மற்றும் வெள்ளி மீது 2.5 சதவீதம் வரி, இறக்குமதி ஆப்பிள் மீது 35 சதவீதம் வரி.
இறக்குமதி செய்யப்படும் கபுலி சென்னா மீது 30 சதவீதம் வரி, பருப்பு மீது 10 சதவீதம் வரி, பெங்கால் பருப்பு மீது 20 சதவீதம் வரி, பருத்தி மீது 5 சதவீதம் வரி வேளாண் கட்டமைப்புக்காக விதிப்பு.
மற்றவை
10 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் 42 பெருநகரங்களில் காற்று மாசைக் குறைக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு.
அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.2.87 லட்சம் ஒதுக்கீடு. மேலும் இத்திட்டம் நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.
சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளித்துறையில் நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்.
8 கோடி குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அடுத்த நிதியாண்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு.
டிஜிட்டல் முறையில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.3,768 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
Comentários